தமிழ் இலக்கியங்கள் மற்றும் கல்விச் சிந்தனைகள்

Author Name : முனைவர்.இரா.ஜெயஸ்ரீ,
Volume : II, Issue :IV,December - 2016
Published on : 2016-12-13 , By : IRJI Publication

Abstract :

1950-இல் வகுக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு மாநில அரசும் இன்னும் பத்து ஆண்டிற்குள் அடிப்படைக் கல்வியினைப் பதினான்கு வயதிற்குட்;பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அறிவியல் கல்வி, மக்கள் தொகை மற்றும் சுற்றுச்சூழல் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான தேவை அதிகமாகிவிட்ட இச்சூழலில், தமிழ்மொழி இலக்கியங்கள் கல்வியின் இன்றியமையாமையை மிகவும் வலியுறுத்துகிறது. நன்னெறி, இனியவை நாற்பது, புறநானூறு, திருக்குறள், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, திரிகடுகம், நாலடியார், நீதிநொறி விளக்கம், விவேகசிந்தாமணி, நன்னூல் போன்ற நூல்களில் கல்வி குறிந்த சிந்தனைகள் எவ்வாறு எடுத்தாளப்பாட்டுள்ளன என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.