பரணரின் அகப்பாடலில் - நன்னன் பதித்த சுவடுகள்

Author Name : முனைவர் க.ஆனந்தி
Volume : II, Issue :IV,December - 2016
Published on : 2016-12-24 , By : IRJI Publication

Abstract :

சங்க இலக்கியத்தில் அகம் சார்ந்த பாடல்கள் தலைவன், தலைவி, தோழி, செவிலி, நற்றாய் என இவர்களின் கூற்றில் அமைந்த இன்ப, துன்ப நிகழ்வுகளைக் கூறும் பாடல்களாக அமைந்திருக்கும். அகநானூற்று பாடல்கள் பல வரலாற்றுச் செய்திகளை எடுத்துக்கூறி, இன்று உலகளாவி பரந்திருக்கும் தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் மிகப்பெரிய கருவூலமாக அமைந்துள்ளது. பரணர் பாடிய அகநானூற்றுப் பாடலில் சிற்றரசர்களையும், பேரரசர்களையும், அவர்தம் ஆட்சிமுறைகளையும் தெளிவுற பாடியுள்ளார்.