சங்க அக இலக்கியமும் கண்ணதகசணின் திரையிசைப் பாடல்களும்

Author Name : முனைவர் க.முத்தழகி
Volume : II, Issue :IV,December - 2016
Published on : 2016-12-24 , By : IRJI Publication

Abstract :

சங்க இலக்கியத்தில் அகவாழ்க்கையை பற்றி கவிஞர்கள் கூறியுள்ள செய்திகளையும், கவிஞர் கண்ணதாசன் தன் திரையிசை பாடல்களில் சங்க இலக்கிய பாடல்களை கருவாக கொண்டு பாடல்களை இயற்றியுள்ளார்.இதில் இயற்கை புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பகங்கற்கூட்டம், வரைவு மேற்கொள்ளுதல், போன்ற செய்திகள் கூறப்பட்டுள்ளது. தலைவனை பிரிந்த தலைவி வருத்தம் அடைவதையும், அவளை தோழி ஆற்றுவிப்பதாகவும் சங்க அகஇலக்கியத்தில் கூறியிருப்பதை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தனது படைப்பில் அழகாக சித்தரித்துள்ளார். தலைவி தன் தலைவன் மீதுக் கொண்ட அன்பை எவ்வாரெல்லாம் உயர்வாக சொல்லியுள்ளாள் என்பதை நம் கண்முன் கொண்டுவந்துள்ளனர். இதனையே கவிஞரும் தன்னுடை படைப்பில் புனைந்துள்ளார். சங்க அகஇலக்கிய பாடல்களுடன் கவிஞர் கண்ணதாசணின் பாடல்களுடன் ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளது.