அறுவகை இலக்கணத்தில் புலமை நெறி

Author Name : முனைவர் சு.சத்தியா
Volume : II, Issue :IV,December - 2016
Published on : 2016-12-26 , By : IRJI Publication

Abstract :

தமிழ் இலக்கண உலகில் தொல்காப்பியம் முதல் இன்று வரை எண்ணற்ற இலக்கண நூல்கள் தோன்றி தமிழ் மொழிக்கு வளத்தை ஏற்படுத்தியுள்ளன. அவற்றுள் அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களைத் தொடர்ந்து காக்கைபாடினியம், யாப்பருங்கலம், காரிகை, பாட்டியல் நூல்கள், அகப்பொருள், அணி நூல்கள் எனப் பல இலக்கண நூல்கள் தோன்றின. அவையனைத்தும் தமிழ் மொழியின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணங்களின் சிறப்பையே எடுத்துரைத்தன. ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் திருவாரூர் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் தாம் இயற்றிய அறுவகை இலக்கணத்தில் தமிழ் இலக்கணம் அறுவகைப்பட்டது எனத் துணிந்து கூறியுள்ளார்.