குறிஞ்சி நிலத்தாவரங்களும் பழந்தமிழர் வாழ்வியலும்

Author Name : அ.ஜெயராஜ்
Volume : II, Issue :IV,December - 2016
Published on : 2016-12-31 , By : IRJI Publication

Abstract :

சங்க கால மக்கள் தங்கள் வாழ்விடங்களை மையமாக வைத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை பிரிவுகளாகப் பிரித்து அந்தந்த பிரிவின் அடிப்படையில் திணையெனப் பெயரிட்டு தங்கள் வாழ்வியலை இயற்கையோடு இயைந்து வாழ்ந்துள்ளனர். அந்தந்த நிலப்பரப்புகளில் விளைந்த தாவரங்களை உணவாகவும் மருந்தாகவும் உண்டு வாழ்ந்துள்ளனர். இதனடிப்படையில் குறிஞ்சி நிலத்தில் விளையும் தாவரங்களையும் அவர்கள் அத்தாவரங்களைப் பயன்படுத்திய விதத்தையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. சங்க கால மக்களின் வாழ்க்கை முறையை காணும்போது அவர்கள் வாழ்ந்த நிலத்தின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதோடு அந்நிலத்தில் விளைந்த தாவரங்களை உணவாகவும் மருந்தாகவும் உண்டு வாழ்ந்து வந்தனர். அதனடிப்படையில் சங்க கால குறிஞ்சி நிலத்தாவரங்களையும் அவற்றை நம் தமிழர் பயன்படுத்திய விதத்தையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.